புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் பகுதியில், அடையாளம் காணப்பட்ட மனித எலும்பு எச்சங்களை, இன்று நேரில் பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிவான், எஸ்.லெனின்குமார், ஜூலை 14ஆம் திகதி அப்பகுதியில் அகழ்வு பணியை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
ஜூலை 4ஆம் திகதி, சுதந்திரபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றைத் துப்புரவு செய்யும் போது, மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.இதைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.