வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தைக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
வெவ்வேறு சிறைத் தண்டனைகளில் இது மிக உயர்ந்தது என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் ஷிஜோ மோன் ஜோசப் கூறினார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் செம்பகப்பாறை பகுதியில் உள்ள வீட்டில் வைத்து தனது பதின்ம வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இடுக்கி விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி ஜி வர்கீஸ், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் வெவ்வேறு விதிகளின் கீழ், மொத்தம் 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.
இருப்பினும், குற்றவாளி ஐந்து ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவிக்க முடியும். சிறைத்தண்டனை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்படுவதால், வெவ்வேறு சிறைத் தண்டனைகளில் இது மிக உயர்ந்தது என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் ஷிஜோ மோன் ஜோசப் கூறினார்.
மேலும் மாற்றாந்தந்தைக்கு ரூ.35,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு அளிக்க ரூ.25,000 வழங்க மாவட்ட சட்ட சேவை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.