Home » சட்டம் & அரசியல் » தூத்துக்குடி படுகொலை மோடி அரசுக்கு கொடுத்த 19 கோடி நன்கொடை செய்த வேலை

தூத்துக்குடி படுகொலை மோடி அரசுக்கு கொடுத்த 19 கோடி நன்கொடை செய்த வேலை

காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி வேதாந்தாவின் ஸ்டெர்லைட்...

👤 Saravana Rajendran27 May 2018 4:59 AM GMT
தூத்துக்குடி படுகொலை மோடி அரசுக்கு கொடுத்த 19 கோடி நன்கொடை செய்த வேலை
Share Post

காங்கிரஸ் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அனுமதியளித்த மோடி அரசு
தூத்துகுடியில் கடந்த 100நாட்களுக்கும் மேலாக வேதாந்தா பெருநிறுவனத்தின் கிளை நிறுவனமாக ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய் உட்பட பல உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் சுற்றுப்புற சுகாராதம் சீர்கேடாகி வருகிறது என்று கூறி போராடிய மக்கள் தங்களின் கோரிக்கைகளை மாவட்ட அட்சியாளர் முன்பு வைக்க ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதிப்பெரணியாக சென்றனர்.
ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று கூறி சாதாரன சீருடையில் இருந்த சிலர் காவல்துறை வாகனங்களில் ஏறி மக்களை நவீன ரக தூப்பாக்கிகள் கொண்டு வேட்டையாடினர் இதில் 13 பேர் மரணமடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்த நிறுவனம் கூறும் போது மத்திய அரசின் சுற்றுப்புறச்சூழல் அமைச்சரகம் தொழிற்சாலையை விரிவுபடுத்த அனுமதி யளித்துவிட்டது என்று, இது போன்ற அசம்பாவிதம் நிகழாமல் இருப்பது அதை கட்டுப்படுத்துவது மத்திய மற்றும் மாநில அரசின் பொறுப்பு என்றும் கூறியுள்ளது,
இந்தநிறுவனத்தின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் மோசமாக இருந்தது. 2014-ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்தை மன்மோகன் சிங் அரசிடம் கொடுத்திருந்தது, ஆனால் மன்மோகன் சிங் சுற்றுப்புறச்சூழலுக்கு அதிக அளவு சீர்கேட்டை விளைவிக்கும் என்ற அறிக்கையின் அடிப்படையில் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை, அதன் பிறகு தேர்தல் அறிவிப்பு வந்ததும். வேதாந்தா நிறுவனம் மன்மோகன் சிங் அரசை வலியுறுத்தாமல் அமைதியாகிவிட்டது, இது போன்ற நிறுவனங்களால் சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படும் என்று தெரிந்த பிறகு அதற்கான அனுமதி அரசால் மறுக்கப்படும், மக்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்ததால் இந்த நிறுவனத்தின் விரிவாக்க திட்டம் கிடப்பில் போடப்பட்டது,
மன்மோகன் சிங் அரசால் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட வேதாந்தா நிறுவன ஆலை விரிவாக்க திட்டம் மோடி தலைமையினாலான புதிய அரசு அமைந்த பிறகு மோடி அரசு தானவே அந்த நிறுவன விரிவாக்க திட்டம் குறித்த அறிக்கையை ஆலை நிர்வாகத்திடமிருந்து கேட்டது, இது குறித்து அறிந்தது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி 2015-ஆம் ஆண்டு மோடி இந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்குமாறும் சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்திற்கு ஆணையிட்டார்.
இந்த நிலையில் மத்திய பசுமைத்தீர்ப்பாயம் 2016-ஆம் ஆண்டு மோடி அரசின் இந்த திட்டம் மக்கள் விரோத திட்டம் என்று கூறி அதற்கு வழங்கிய அனுமதியை திரும்பபெறவேண்டும் என்றும் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை துவக்கவேண்டும் என்று கூறியது, ஆனால் மோடி இது குறித்து எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துவிட்டார். இந்த நிலையில் வேதாந்தா நிறுவனம் பாஜகவிற்கு ரூ 19 -கோடி நன்கொடை வழங்கியது.
முந்தைய அரசு, தேசிய பசுமைத்தீர்ப்பாயம், சமூக சூழியல் ஆய்வு குறித்த அனைத்து அறிக்கைகளும் இந்த நிறுவனத்தால் பலத்த பாதிப்பு ஏற்படும் என்று கூறியும் 19 கோடியை வாங்கிக்கொண்டு மோடி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தின் விரிவாக்கத்தை அனுமதித்துள்ளார்.
Business Standard 25.5.18