Home » சட்டம் & அரசியல் » நீதியின் வழியில் அரசு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றியே தீரும்! ஜனாதிபதி

நீதியின் வழியில் அரசு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றியே தீரும்! ஜனாதிபதி

20ஆவது திருத்தச் சட்ட வரைவு ஏதோவொரு வழியில் நிறைவேறியே தீரும்.

👤 Sivasankaran3 Oct 2020 7:19 AM GMT
நீதியின் வழியில் அரசு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றியே தீரும்! ஜனாதிபதி
Share Post

மக்களின் ஆணைக்கேற்ப எமது அரசு நீதியின் வழியில் செயற்படுகின்றது. எனவே, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு அரசுக்குப் பாதகத்தை ஏற்படுத்தாது. 20ஆவது திருத்தச் சட்ட வரைவு ஏதோவொரு வழியில் நிறைவேறியே தீரும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

20ஆவது திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ள எதிரணியினர் வீதிகளில் இறங்கியும் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரசை மிரட்டும் பாணியில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

எதிரணியினரின் இந்த மிரட்டல்களுக்கெல்லாம் எமது அரசு அடிபணியாது. மக்களின் ஆணைக்கேற்ப எமது அரசு நீதியின் வழியில் செயற்படுகின்றது. எனவே, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு அரசுக்குப் பாதகத்தை ஏற்படுத்தாது.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு ஏதோவொரு வழியில் நிறைவேறியே தீரும். அதில் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை.

நாடாளுமன்றத்தில் எமக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. எதிரணி உறுப்பினர்கள் சிலரும் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராகவுள்ளனர்.

அரசின் கூட்டணியில் இருக்கும் பங்காளிக் கட்சிகளில் ஒரு சிலர் அதிருப்தியில் இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை.

வலுமைமிக்க அமைச்சுப் பதவிகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற பிரச்சினை. அதற்காக பங்காளிக் கட்சிகளில் உள்ளவர்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளனர் என்று எவரும் பொருள் கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.