Home » சட்டம் & அரசியல் » ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு

ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு

ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

👤 Sivasankaran13 Oct 2021 5:10 PM GMT
ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 கூட்டத்தில் முடிவு
Share Post

இத்தாலி நடத்திய ஜி-20 நாடுகள் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த ஜி-20 நாடுகள் கூட்டத்தை இத்தாலி மெய்ந்நிகர் முறையில் நடத்தியது.

தலீபான்களின் ஆட்சி நடைபெறும் ஆப்கானிஸ்தானில் நிதி நிலைத்தன்மையை தக்க வைக்க ஜி-20 நாடுகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஐ.நா.சபை மிக முக்கிய பங்காற்றும். எனவே அந்நாட்டில் ஐ.நா.சபை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆப்கனில் ஐ.நா சபை பணியாளர்கள் மற்றும் மனிதநேய பணியாளர்களுக்கு முழுமையான, பாதுகாப்பான, தங்கு தடையற்ற உரிமைகள் பாலின வேறுபாடின்றி வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.