Home » சட்டம் & அரசியல் » முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா 2011 விபத்து தொடர்பாக விளக்க மறியலில் வைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா 2011 விபத்து தொடர்பாக விளக்க மறியலில் வைப்பு
நேற்று காலை (மார்ச் 18) ஶ்ரீ ரங்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
👤 Sivasankaran19 March 2023 11:07 AM GMT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்காவை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை (மார்ச் 18) ஶ்ரீ ரங்கா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பதில் நீதவான் ரஞ்சித் சேபால தஹநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் சாட்சிகளிடம் தனது செல்வாக்கைச் செலுத்தியதற்காக களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் நேற்று மாலை (மார்ச் 17) கைது செய்யப்பட்டார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire