Home » சட்டம் & அரசியல் » ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள்

ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள்

சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

👤 Sivasankaran26 Feb 2021 8:47 AM GMT
ஜெனீவாவில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகள்
Share Post

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா தொடர்பான விவாதம் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்து, நார்வே, கனடா, ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசினர்.

எனினும், இந்தியாவும், ஜப்பானும் நடுநிலையாக இருந்துள்ளன. ஆஸ்திரேலியாவும் மேற்கத்திய உலகின் நட்பு நாடாக இருந்தபோதிலும் மிதமான தொனியிலேயே பேசியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய 21 நாடுகளில், பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.