முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் பண்டாரு வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர் ஆவார்.
தனது மகன் இறந்த தகவல், பாஜக எம்பி பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு காலையில் தான் தெரிவிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ராம்நகர் வீட்டில் இரவு உணவிற்கு பின் அவர் திடீரென மயக்கமடைந்தார். பின்னர் சுமார் 12:30 மணியளவில் வைஷ்ணவ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
2016-ஆம் ஆண்டு அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் மரணமடைந்த வாணியல் துறையில் டாகட்ரேட்டிற்கு படித்துக்கொண்டிருந்த ரோகித் வேமுலாவின் மரணத்திற்குப் பிறகு ஊடகவியளார்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய பண்டாரு தத்தாரேயாவிடம் ரேகித் வேமுலாவின் அம்மா அவனை ஒழுங்காக வளர்க்கவில்லை, படிப்பில் அக்கரையில்லாமல் தேவையில்லாத வேலையில் அவன் ஈடுபட்டிருந்தான் அதன் விளைவுதான் அவனை தற்கொலை செய்யுமளவிற்கு ஆளாக்கியுள்ளது என்று கூறியிருந்தார்