வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கருவூலத்திற்கு ரூ.3 ஆயிரத்தை வழங்குகிறது
மனுஷ நாணயக்காரவினால் உத்தியோகபூர்வமாக காசோலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (23) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.
👤 Sivasankaran24 Jan 2023 1:15 PM GMT

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திறைசேரிக்கு 3 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் உத்தியோகபூர்வமாக காசோலையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (23) ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், கடந்த வருடம் பெறப்பட்ட செயற்பாட்டு உபரியில் இருந்து, மருந்து கொள்வனவு, நெல் கொள்வனவு, அரச ஊழியர் சம்பளம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக இந்த தொகையை வழங்கியுள்ளது. .
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காசோலையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் கையளித்தார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire