
அஜர்பைஜான் - ஆர்மீனிய படைகளுக்கு இடையேயான போர் தீவிரம்அடைந்துள்ளது. தங்கள் ராணுவம் சில கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் தெரிவித்துள்ளார்.
இந்த சண்டையில் 3000க்கும் அதிகமான அஜர்பைஜான் வீரர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருநாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நகோர்னோ - காராபாக் என்ற பகுதிக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடின.
கடந்த 27ல் அசர்பைஜான் மற்றும் அர்மீனிய படைகளுக்கு இடையே மீண்டும் பயங்கர மோதல் வெடித்தது. அந்த சண்டையில் தங்கள் வீரர்கள் 150 பேர் உயிரிழந்ததாக நகோர்னோ - காராபாக் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3000க்கும் மேற்பட்ட அஜர்பைஜானியர்கள் உயிர் இழந்ததாகவும் தெரிவித்தது. எனினும் இதுகுறித்து எந்த தகவலையும் அஜர்பைஜான் வெளியிடவில்லை.
இந்நிலையில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் நேற்று கூறியதாவது: "மடகாஸ் மற்றும் ஏழு கிராமங்களை ஆர்மீனிய படைகள் கைப்பற்றியுள்ளன. அர்மீனிய அரசு தங்கள் படைகளை திரும்பப் பெறவேண்டும். இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும்." என்று அவர் கூறினார்.