Home » சட்டம் & அரசியல் » காபூலில் கார் குண்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

காபூலில் கார் குண்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

தாக்குதலில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

👤 Sivasankaran5 Aug 2021 1:58 PM GMT
காபூலில் கார் குண்டுத் தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு
Share Post

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஷெர்பூர் பகுதியில் பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லாகான் முகமது வீடு உள்ளது.

இந்த வீட்டின் முன்பு கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 பொதுமக்கள் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.