எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்களுக்கான மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங்க் யீயையும் சந்தி்தார்.
இருவரும் இரு தரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பு குறித்து 2 மணி நேரத்திற்கு மேல் விவாதித்தனர்.
அப்போது எல்லை பிரச்னை குறித்தும் ஆலோசித்தனர்..இதில் . கிழக்கு லடாக்கில் பதற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மேற்கொள்ள வேண்டாம் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ யிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இரு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் 5 அம்ச திட்டத்திற்கு இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் அளித்தனர்.
அதன்படி, '' எல்லையில் தற்போது உள்ள சூழ்நிலை இரு தரப்புக்கும் உகந்ததாக இல்லை. எனவே இரு தரப்புஎல்லை படைகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். விரைவில், படைகளை வாபஸ் பெற்று, இரு தரப்பினரும் முறையான இடைவெளியை கடைபிடித்து பதற்றத்தை தணிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லை பிரச்னையில் கருத்தொற்றுமை கொண்டு இந்திய சீன உறவுகளை பலப்படுத்த வேண்டும். வேறுபாடுகளை, பிரச்னையாக மாறாமல் தடுக்க வேண்டும். எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த ஒரு செயலிலும் இரு தரப்பினரும் ஈடுபடக்கூடாது. எல்லையில் பதற்றம் தணிந்த பிறகு, இரு நாடுகளுக்கு இடையேயும், நம்பிக்கை வளர்ப்பதற்கான புதிய அளவுகோல்களை செயல்படுத்த வேண்டும். மேலும், சிறப்பு பிரதிநிதிகள் மூலம் இரு நாடுகளும் தொடர்ந்து உரையாடல் நடத்த வேண்டும். இந்தியா - சீனா எல்லை விவகாரத்தில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை நடைமுறைகள் இரு தரப்பு கூட்டங்களில் சந்திப்புகளில் தொடர்ந்து நடக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.