Home » சட்டம் & அரசியல் » ஆன்லைனில் ஐ.நா.,வின் 75வது ஆண்டு விழா

ஆன்லைனில் ஐ.நா.,வின் 75வது ஆண்டு விழா

ஆன்லைன் மூலமாக பங்கேற்க உள்ளதால், 119 நாடுகளின் அதிபர்களும், 54 நாடுகளின் பிரதமர்களும், பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பர்

👤 Sivasankaran21 Sep 2020 7:48 AM GMT
ஆன்லைனில் ஐ.நா.,வின் 75வது ஆண்டு விழா
Share Post

ஐ.நா.,வின், 75வது ஆண்டு விழா மற்றும் பொதுச் சபைக் கூட்டம், இன்று (செப்டம்பர், 21) துவங்க உள்ளது. பல்வேறு நாடுகளின் அதிபர்கள் மற்றும் பிரதமர்கள், 'ஆன்லைன்' மூலம், இதில் பங்கேற்க உள்ளனர்.

ஐ.நா., பொது சபை கூட்டம், ஒவ்வொரு ஆண்டும், செப்., மாதத்தில் நடக்கும். இதில், ஐ.நா.வில் உறுப்பினர்களாக உள்ள, 193 நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதமர்கள் நேரில் பங்கேற்பர். ஒரு வாரம் நடக்கும் கூட்டத்தில், பல்வேறு தலைப்புகளின் கீழ், இவர்கள் பேசுவர். கூட்டத்திற்கு இடையே, மற்ற நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களுடனான சந்திப்பும் நடக்கும்.

ஐ.நா., அமைப்பு துவங்கி, 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையடுத்து, இன்று சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 22 முதல், 29ம் தேதி வரை, பொதுச் சபையில் விவாதங்கள் நடக்க உள்ளன.

கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில், 80 நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர். தற்போது, ஆன்லைன் மூலமாக பங்கேற்க உள்ளதால், 119 நாடுகளின் அதிபர்களும், 54 நாடுகளின் பிரதமர்களும், பொதுசபை கூட்டத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட, இந்தத் தலைவர்களின், காணொலி உரை, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், ஐ.நா., சபையில் ஒளிபரப்பப்பட உள்ளது.