Home » சட்டம் & அரசியல் » ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

இலங்கைக்கு வெளியே பன்னாட்டு மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமும் ஆகும்.

👤 Sivasankaran14 Sep 2021 3:26 PM GMT
ஐ.நா பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று ஆரம்பம்
Share Post

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது அமர்வு இன்று (14) அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாக உள்ளது.

இக்கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கிறார்.

ஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பதுடன், இலங்கைக்கு வெளியே பன்னாட்டு மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமும் ஆகும்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நியூயோர்க் செல்லவுள்ளனர்.