Home » சட்டம் & அரசியல் » பாஜகவை விலக்கிவையுங்கள் #UNFRIEND_BJP பெதுமக்களே முன்னெடுக்கும் பிரச்சாரம்

பாஜகவை விலக்கிவையுங்கள் #UNFRIEND_BJP பெதுமக்களே முன்னெடுக்கும் பிரச்சாரம்

வட இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சிறுமிகளை பாலியல் ரீதியில் சீரழித்து கொலைசெய்யும் நிகழ்வுகள் தொடர்கிறது இந்த நிலையில் பொதுமக்களே சமூகவ்லைதளங்களில் பாஜகவினரின் நட்பை முறிக்கும் வகையில் #அன்ஃப்ரெண்ட்பிஜேபி (#UNFRIEND_BJP) என்ற ஹேஷ்டேக்கை பெருமளவில் பயன்படுத்திவருகின்றனர்.

👤 Saravana Rajendran16 April 2018 8:28 AM GMT
பாஜகவை விலக்கிவையுங்கள் #UNFRIEND_BJP பெதுமக்களே முன்னெடுக்கும் பிரச்சாரம்
Share Post

காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல்வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார், உத்திரப் பிரதேச மாநிலம் உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு மைனர் பெண்ணை பாலியல்வன்கொடுமை செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதை ஒட்டி முகநூலில் உள பலரும் பாஜக உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கி வருகின்றனர்.
இதற்காக #அன்ஃப்ரெண்ட் பிஜேபி என்னும் ஹேஷ்டாக் உபயோகம் பரவலாகி வருகிறது, இதன் மூலம் கத்துவா மற்றும் உன்னாவ் பலாத்கார விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் பாஜகவினரை நண்பர்கள் பட்டியலில் இருந்து பலர் நீக்கி வருகின்றனர். மேலும் தங்கள் நண்பர்களையும் பாஜகவினரை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும்பாலானோர், " பாஜகவினரே உங்கள் கரங்களில் இரத்தக் கறை படிந்துள்ளது. எனவே உங்கள் நட்பு தேவை இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிரதமர் மோடி இது குறித்து தனது மவுனத்தை கலைத்தார். அவர் இந்த சம்பவங்கள் வெட்கப்படத் தக்கவை என கடும் கண்டனத்தை தெரிவித்தார். ஆனால் அதே நாள் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேகி எனபவர், ஆசிஃபாவை பாலியல்வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு பாஜக அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்து பேரணியில் கலந்துக் கொண்டதை ஆதரித்து கருத்து தெரிவித்தார்.