நல்லாட்சி அமைச்சின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கு பதிய அரசியலமைப்பை உருவாக்குவதா என்பது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து வருவதாக கூறப்படுகின்றது.
அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, "அரசாங்கம் முழுமையான அரசியலமைப்பொன்றை உருவாக்குவது குறித்து சிந்தித்து வருகின்றது.
அதாவது, புதிய தேர்தல் முறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றது.
ஆனாலும் அரசாங்கம் முதலில் 20ஆவது திருத்தம் குறித்தே கவனம் செலுத்தும்.
இதற்கு காரணம் நல்லாட்சி அமைச்சின் 19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கே ஆகும்.
அதன்பின்னர் முழுமையான அரசியலமைப்பினை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெறும்" என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.