Home » சட்டம் & அரசியல் » 19 ஒழிக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு! - ஜனாதிபதி உறுதி

19 ஒழிக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு! - ஜனாதிபதி உறுதி

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மக்களுக்கு வாக்குறுதி அளித்ததை போல அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

👤 Sivasankaran20 Aug 2020 2:35 PM GMT
19 ஒழிக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு! - ஜனாதிபதி உறுதி
Share Post

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று பிற்பகல் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். அத்துடன், நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

எமது நாட்டில் அதியுயர் அரசியலமைப்புக்கு உட்பட்டு நாட்டின் ஒருமித்த தன்மை மற்றும் பௌத்த மதத்தை பாதுகாப்பேன் என்று நான் வாக்குறுதி அளித்துள்ளேன். ஏப்ரல் தாக்குதல் காரணமாக நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கும் போது நாட்டு மக்கள் மத்தியில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் சந்தேகமான நிலை காணப்பட்டது.

பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமான 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மக்களுக்கு வாக்குறுதி அளித்ததை போல அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்பின்னர் நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்பினை உருவாக்குவோம். நாடாளுமன்றம் மற்றும் மக்களின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.