Home » சட்டம் & அரசியல் » 20வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் வயதெல்லையை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

20வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் வயதெல்லையை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பற்றி கருத்து வெளியிடும் போதே தேரர் இதனை கூறியுள்ளார்.

👤 Sivasankaran20 Sep 2020 12:00 PM GMT
20வது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் வயதெல்லையை குறைக்க வேண்டிய அவசியமில்லை: மெதகொட அபயதிஸ்ஸ தேரர்
Share Post

சிறிலங்காவில் ஜனாதிபதி பதவிக்கு வரக்கூடியவரின் வயது எல்லை 35 இல் இருந்து 30 ஆக குறைப்பது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் வேலைத்திட்டத்தில் இணைந்து செயற்பட்ட முக்கிய பௌத்த பிக்குவான பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பற்றி கருத்து வெளியிடும் போதே தேரர் இதனை கூறியுள்ளார்.

30 வயதான இளைஞர் ஜனாதிபதியாக பதவிக்கு வருவார் என்றால் அது நாட்டுக்கு அபாக்கியம். நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வர 35 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதை 30 வயதாக மாற்ற வேண்டியது அவசியமா?

அந்தப் பதவிக்கு வர 35 வயதாகி பரிபூரணமடைய வேண்டும். கௌதம சித்தார்த்தர் புத்தராக பரிபூரணமடையவும் 35 வயதானது எனவும் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.