Home » சட்டம் & அரசியல் » 20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக சம்பந்தனும் மனு

20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக சம்பந்தனும் மனு

கனக ஈஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

👤 Sivasankaran24 Sep 2020 9:03 AM GMT
20வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக சம்பந்தனும் மனு
Share Post

அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட வரைவை சவாலுக்குட்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

20வது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிராக இதுவரை 6 தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.