Home » சட்டம் & அரசியல் » 20 ஆவது திருத்தச் சட்டவரைவை ஆதரிக்கச் சுதந்திரக் கட்சி முடிவு!

20 ஆவது திருத்தச் சட்டவரைவை ஆதரிக்கச் சுதந்திரக் கட்சி முடிவு!

கவனமாக ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

👤 Sivasankaran4 Oct 2020 12:16 PM GMT
20 ஆவது திருத்தச் சட்டவரைவை ஆதரிக்கச் சுதந்திரக் கட்சி முடிவு!
Share Post

20 ஆவது திருத்தச் சட்டவரைவுக்கு ஆதரவு வழங்க சிறிலங்கா சுதந்திரக் கட்சி முடிவெடுத்துள்ளதாக அந்தக் கட்சியின் பிரதி தலைவரும், அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்த முன்மொழிவு குறித்து கவனமாக ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது திருத்த சட்டமூலத்தை ஆராய்ந்த தமது கட்சியின் குழு, திருத்தப்பட வேண்டிய விடயங்கள் அடங்கிய பரிந்துரைகளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.