Home » சட்டம் & அரசியல் » 20 குறித்த முடிவை அறிவித்தது உயர்நீதிமன்றம்!

20 குறித்த முடிவை அறிவித்தது உயர்நீதிமன்றம்!

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

👤 Sivasankaran11 Oct 2020 9:47 AM GMT
20 குறித்த முடிவை அறிவித்தது உயர்நீதிமன்றம்!
Share Post

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த முடிவு உயர்நீதிமன்றத்தினால், சபாநாயகருக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 39 மனுக்கள் மற்றும் 7 எதிர்மனுக்கள் குறித்து ஐந்து நீதியரசர்களைக் கொண்ட குழாம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் தமது முடிவைச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் உள்ள சபாநாயகர் செயலகத்துக்கு உயர்நீதிமன்றத்தின் முடிவு அடங்கிய கடிதம் கிடைத்திருப்பதாகவும், திங்கட்கிழமை அதனை திறந்துப் பார்க்கவுள்ளதாகவும், சபாநாயகர் தெரிவித்துள்ளார். அத்துடன், உயர்நீதிமன்றத்தின் இந்த விளக்கம், எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.