Home » சட்டம் & அரசியல் » 20வது திருத்தச் சட்டத்திற்கு அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை கடும் எதிர்ப்பு!

20வது திருத்தச் சட்டத்திற்கு அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை கடும் எதிர்ப்பு!

அரசாங்க அமைப்புகளை அரசாங்கத்தின் மூன்று கிளைகளின் ஊடாக சமநிலைப்படுத்திக்கொள்கின்றன.

👤 Sivasankaran13 Oct 2020 6:22 AM GMT
20வது திருத்தச் சட்டத்திற்கு அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை கடும் எதிர்ப்பு!
Share Post

அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை, அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை கடுமையாக எதிர்த்துள்ளது.

அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் ஜனநாயகத்தின் மையத்தை நிராகரிக்கிறது. இது மனிதகுலத்துக்கு எதிரானது. எனவே அது சட்டமாக்கப்படக்கூடாது என்று அந்த சபை கோரியுள்ளது

இந்தநிலையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை கோரியுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தம் பிற்போக்குத்தனமானது மற்றும் வளர்ச்சியடையாத பழங்குடி சமுதாயத்திற்கு செல்ல வழி வகுக்கிறது,

அத்துடன் சிந்தனை சுதந்திரம் மற்றும் செயல் சுதந்திரம் போன்ற மனித சமுதாயத்தின் முற்போக்கான பண்புகளை கடுமையாக தடுக்கும் என்று அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை குறிப்பிட்டுள்ளது.

தற்போது உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள் அரசாங்க அமைப்புகளை அரசாங்கத்தின் மூன்று கிளைகளின் ஊடாக சமநிலைப்படுத்திக்கொள்கின்றன.

சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகியவை ஒன்றுக்கொன்று சமநிலையை வைத்திருக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளன.

எனினும் முன்மொழியப்பட்ட 20வது திருத்தம் இந்த மூன்று அமைப்புக்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி ஜனநாயகத்தை அச்சுறுத்துகிறது என்றும் அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை தெரிவித்துள்ளது.