
20ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதம் குறித்த கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்றைய தினம் பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கூடுதல் நேரம் விவாதம் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.