அரசியலமைப்பின் 20வது திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரிக்க 9 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு குழுக்களில் உள்ள ஒன்பது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவளிப்பதாக அரசாங்கத்தின் முன்னணி அரசியல்வாதி ஒருவருக்கு உறுதியளித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆளுங்கட்சி அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை கொண்டு வரும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் எதிர்க்கட்சியினரைப் பிளவுபடுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.