வரும் பொதுத் தேர்தலில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும் என்று நம்புவதாகபிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
வரும் பொதுத் தேர்தலில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும் என்று நம்புவதாகவும், அஞ்சல் மூல வாக்களிப்பில் அதிகளவு வாக்குகள் பதிவாகியிருப்பதால், 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஜேர்மனி தூதுவராகப் பணியாற்றிய ஜோர்ன் ரொட் நாடு திரும்பவுள்ளார். நேற்றுக்காலை அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை, ஜோர்ன் ரொட் சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்ட போதே அவர் 70 வீதம் வாக்களிப்பு இருக்கும் என்று கூறியிருக்கிறார்.