Home » முதன்மைச் செய்திகள் » அந்நிய அரசியல்வாதிகளை தலையிட அனுமதிக்கவேண்டாம்- அமைச்சர் சன்முகம்

அந்நிய அரசியல்வாதிகளை தலையிட அனுமதிக்கவேண்டாம்- அமைச்சர் சன்முகம்

சிங்கப்பூர் அரசியலில் தலையிடுமாறு, வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கு சிங்கப்பூரர்கள் ஒருபோதும் அழைப்பு விடுக்கக் கூடாது என உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

👤 Saravana Rajendran2 Sep 2018 7:04 PM GMT
அந்நிய அரசியல்வாதிகளை தலையிட அனுமதிக்கவேண்டாம்- அமைச்சர் சன்முகம்
Share Post

சிங்கப்பூரில், மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்டிருப்பது மக்களின் உரிமை.இருப்பினும், நாட்டுக்கு வெளியே சென்று வெளிநாட்டுத் தலைவர்களை உள்நாட்டு விவகாரத்தில் தலையிட அழைப்பு விடுப்பதை எக்காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்

சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியொன்றில் திரு. சண்முகம் கூறியதாவது,.

சிங்கப்பூரர்களான வரலாற்று நிபுணர் தம் பிங் ஜின், பகுதிநேரப் பத்திரிகை நிருபர் கிர்ஸ்டென் ஹான் , சமூக ஆர்வலர் ஜோலோவான் வாம் , நாவல் ஆசிரியர் சோனி லியூ ஆகியோர் மலேசிய பிரதமர் மகாதீர் முகமதை சந்தித்துப் பேசியது குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகேட்டனர், அதற்கு அவர்

அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிங்கப்பூரர்கள் அனைவரின் நடத்தையும் "சற்று கவலைக்குரியது" என்றும் "சற்று வருந்தத்தக்கது" என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தென் கிழக்காசியாவில் ஜனநாயகம், மனித உரிமைகள், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் முன்னணிப் பங்காற்ற முன்வருமாறு டாக்டர் மகாதீருக்கு அழைப்பு விடுக்கும் பதிவு ஒன்றை டாக்டர் தம் வெளியிட்டதைத் திரு. சண்முகம் சுட்டினார்.

அதன் அர்த்தம் என்னவென்பது தெளிவாய்த் தெரிவதாக அவர் சொன்னார். மேலும், பகுதிநேர பத்திரிகையாளர் கிர்ஸ்டென் ஹான் இட்ட பதிவில், அந்த விவகாரம் தென் கிழக்காசியாவைப் பற்றியதுதானே தவிர சிங்கப்பூரைப் பற்றியது அல்ல எனக் குறிப்பிட்டிருந்ததை, திரு. சண்முகம் நினைவுகூர்ந்தார்.

தென்கிழக்காசியாவில் இல்லாமல் சிங்கப்பூர் வேறு எங்கு இருக்கிறது என்று அவர் வினா எழுப்பினார். நமக்கு நிலவியல் பாடம் தேவையா என்றும் அவர் கேட்டார். இம்மாதிரியான விவகாரங்களில் ஒவ்வொருவருமே கவனமாக நடந்துகொள்வது முக்கியம் என அவர் வலியுறுத்தினார். முன்னதாக மரைன் பரேட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சியா கியன் பெங், அந்தச் சம்பவத்தின் தொடர்பில் டாக்டர் தம் மீது தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். .


இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் சில அங்கும் சென்று மதவாத அரசியல் ரீதியாக பேச ஆரம்பித்துள்ளனர். இந்தச்செயலை ஏற்கனவே சிங்கப்பூர் அரசு கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.