மலேசிய மன்னர் பதவி விலகினார் - என்ன காரணம்?
ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் முன்பே மலேசிய மன்னர் சுல்தான் முஹம்மது (வயது 49) நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். இதற்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

ஐந்தாண்டு பதவிக் காலம் முடியும் முன்பே மலேசிய மன்னர் சுல்தான் முஹம்மது (வயது 49) நேற்று தனது பதவியிலிருந்து விலகினார். இதற்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
மலேசியா மன்னராக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் பதவியேற்ற சுல்தான் முஹம்மது 'மன்னர் ஐந்தாம் முஹம்மது' என்று அந்நாட்டவர்களால் குறிப்பிடப்படுகிறார்.
உடல்நலக்குறைவுக்காக சிகிச்சை மேற்கொள்ளப் போவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னர் விடுப்பு எடுத்திருந்தார். அதன் பின்னர், ரஷியாவை சேர்ந்த முன்னாள் 'மாஸ்கோ அழகி' பட்டம் பெற்ற இரு பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் இதுகுறித்து அரண்மனை வட்டாரங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. மருத்துவ விடுப்பு முடிந்த நிலையில் மன்னர் முகமது கடந்த வாரம் தனது பணிகளை மீண்டும் தொடங்கினார்.
இந்நிலையில் அவர் தனது பதவியை நேற்று திடீரென்று ராஜினாமா செய்தார். இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. மலேசியாவில் மன்னர் குலத்தைச் சேர்ந்த 9 குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில் இருந்து தான் மன்னர்கள் சுழற்சி முறையில் பதவி ஏற்கின்றனர். இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியாளர் கவுன்சில் ஒன்றை அமைத்துள்ளனர். இங்கு நடைபெறும் ஒட்டெடுப்பு மூலம் அடுத்த மன்னர் தேர்வு செய்யப்படுவார்.