Home » முதன்மைச் செய்திகள் » ஓவியம் - சிற்பக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச்செம்மல் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஓவியம் - சிற்பக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைச்செம்மல் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கு தமிழக அரசின் சார்பில் அளிக் கப்படும் கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
👤 Saravana Rajendran22 Feb 2018 5:01 AM GMT
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழுவின் மூலம், நுண்கலைத் துறையில் செய்துள்ள சாதனைகளையும், சேவைகளையும் பாராட்டும் வகையில், தமிழகத்தைச் சேர்ந்த கலை வல்லுநர்களுக்கு கலைச் செம்மல் விருதையும், ரூ.50 ஆயிரத்துக்கான ரொக்கப்பரி சையும் வழங்கி ஊக்குவிக்கப் பட்டு வருகிறது.
அந்த வகையில், 2013 - -2014 முதல் 2017 - -2018 வரையிலான 5 ஆண்டுகளுக்கு மரபுவழிப் பிரிவில் ஆண்டுக்கு தலா ஒரு கலைஞருக்கும், நவீனபாணி பிரிவில் ஆண்டுக்கு தலா ஒரு கலைஞருக்கும் கலைச்செம்மல் விருது வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களு டைய புகைப்படத்துடன்கூடிய தன் விவரக் குறிப்பு, விண்ணப்பத் தாரரால் உருவாக்கப்பட்ட சிறந்த கலைப்படைப்புகளின் 10 புகைப் படங்கள், விண்ணப்பதாரரின் படைப்புத்திறன் பற்றிய செய்தித் தொகுப்புகள் அடங்கிய விவ ரங்கள் ஆகியவற்றை மார்ச் 10 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் .இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படும். விண்ணப்பங்களை
ஆணையர், கலை பண்பாட்டுத் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், இரண்டாம் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை -8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 2819 3195 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire