பதவியேற்ற சில மணி நேரங்களில் சுட்டுக்கொல்லப்பட்ட மேயர்
மெக்சிகோவின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார்.
👤 Sivasankaran3 Jan 2019 10:23 AM GMT

மெக்சிகோவின் ஆக்சகா மாநிலம், டிலாக்சியாகோ நகர மேயராக அலெஜாண்டரோ அபார்சியோ என்பவர் கடந்த ஒன்றாம் தேதி பதவியேற்றார்.அவர், பதவியேற்ற சில மணி நேரங்களில், கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, அங்குள்ள அரங்கத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர், மேயரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மேயர் உள்ளிட்ட 4 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி மேயர் உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire