லெய்செஸ்டரில் உள்ள உணவு விடுதியில் பாரிய தீ விபத்து
இங்கிலாந்தில், லெய்செய்டர் – ஹம்பர்ஸ்டோன் பகுதியில் உள்ள துரித உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராத விதமாக...
👤 Sivasankaran3 Jan 2019 11:46 AM GMT

இங்கிலாந்தில், லெய்செய்டர் – ஹம்பர்ஸ்டோன் பகுதியில் உள்ள துரித உணவு விடுதி ஒன்றில் எதிர்பாராத விதமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது. பிக் ஜோன்ஸ் என்ற இந்த உணவகத்தில் திடீரென்று தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தினால், டைசாட் வீதி மற்றும் புனித ஜோர்ஜ் வீதி ஆகியவை போக்குவரத்துக்காக மூடப்பட்டுள்ள நிலையில், மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
துரித உணவு விடுதியின் சமையலறை மற்றும் களஞ்சியசாலை பகுதியில் ஏற்பட்ட தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியதை அடுத்து விபத்து தொடர்பாக அதிகளவான தொலைபேசி அழைப்புகள் கிடைத்ததாக லெய்செஸ்டர் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire