Home » முதன்மைச் செய்திகள் » கல்கரியின் எம்.எல்.ஏ. ஸ்டீபனி மெக்லீன் பதவி விலகல்

கல்கரியின் எம்.எல்.ஏ. ஸ்டீபனி மெக்லீன் பதவி விலகல்

கனடா, கல்கரியின் புதிய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ. ஸ்டீபனி மெக்லீன் தனது பதவியை ராஜினாமா...

👤 Sivasankaran3 Jan 2019 12:15 PM GMT
கல்கரியின் எம்.எல்.ஏ. ஸ்டீபனி மெக்லீன் பதவி விலகல்
Share Post

கனடா, கல்கரியின் புதிய ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ. ஸ்டீபனி மெக்லீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்டீபனி மெக்லீன் பதவி விலகியுள்ளார் என்பதனை அல்பர்ட்டா முதல்வர் ரேச்சல் நோட்லே நேற்று (புதன்கிழமை) தனது முகநூல் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அல்பர்ட்டா முதல்வர் ரேச்சல் நோட்லே, ஸ்டீபனி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் எதிர்கால விடயங்களில் சிறந்த பங்களிப்பினை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்" என தெரிவித்துள்ளார்.

மேலும் மறு தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் என்றும் அதற்கு பதிலாக தொடர்ந்தும் சட்ட நடைமுறையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் கடந்த மே மாதம் ஸ்டீபனி மெக்லீன் அறிவித்திருந்தார்.