Home » முதன்மைச் செய்திகள் » அரசியல் பதட்டங்களுக்கு இடையே கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா விஜயம்
அரசியல் பதட்டங்களுக்கு இடையே கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனா விஜயம்
ஒட்டாவா மற்றும் பீஜிங்கிற்கு இடையிலான அரசியல் பதட்ட சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட் சபை உறுப்பினர்களும் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
👤 Sivasankaran4 Jan 2019 8:51 AM GMT

ஒட்டாவா மற்றும் பீஜிங்கிற்கு இடையிலான அரசியல் பதட்ட சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், செனட் சபை உறுப்பினர்களும் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
செனட் உறுப்பினர்களான விக்டர் ஓஹ், ஜோசப் டே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மைக்கல் கூப்பர், கெங் டான், மஜிட் ஜவ்ஹாரி, சந்திர ஆர்யா ஆகியோர் நாளை (சனிக்கிழமை) சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஹுவாவே அதிகாரி கனடாவில் கைது செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 3 கனடியர்கள் சீனாவில் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான பதட்டங்களை தோற்றுவித்துள்ள நிலையில், கனடா – சீனா சட்டமன்ற சங்கத்தின் ஏற்பாட்டில் இருநாட்டு அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire