Home » முதன்மைச் செய்திகள் » ஜெர்மனியில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜெர்மனியில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜெர்மனியில் முதன்முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு வீடற்றவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

👤 Sivasankaran4 Jan 2019 11:26 AM GMT
ஜெர்மனியில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Share Post

ஜெர்மனியில் முதன்முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு வீடற்றவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடற்றவர்களை கண்காணிக்கும் BAGW அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த அக்டோபர் மாதம் குறைந்த வெப்பநிலை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகள் இல்லாத நிலையில், வீதிகளில் வசிக்கும் நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த ஒன்பது பேரின் உடலையும் பரிசோதனை செய்து பாரத்ததில், அவர்கள் அதிக குளிரினை தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரிழந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.