சுவிட்சர்லாந்தை பயமுறுத்திடும் மூளைக்காய்ச்சல்
சுவிட்சர்லாந்தில் உண்ணிகளால் பரவும் மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2018ஆம் ஆண்டு அதிகரித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
👤 Sivasankaran4 Jan 2019 11:34 AM GMT

சுவிட்சர்லாந்தில் உண்ணிகளால் பரவும் மூளைக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2018ஆம் ஆண்டு அதிகரித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. உண்ணிகளால் பரவும் மூளைக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 380 எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் அதிகம். சுவிட்சர்லாந்திலுள்ள சுமார் 30 சதவிகித மக்கள் இதற்கான நோய் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
ஒட்டுண்ணிகளால் ஆபத்து இருப்பதால் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் எச்சரிக்கை இனிமேல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire