ஸ்காபரோவில் உள்ள தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
கனடாவில், ஸ்காபரோவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காமாண்டர் வூல்வர்டு...

கனடாவில், ஸ்காபரோவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காமாண்டர் வூல்வர்டு பகுதியில் உள்ள "எஸ்டீ லாடர்" எனப்படும் தொழிற்சாலையின் வளாகத்திலேயே நேற்று (வியாழக்கிழமை) காலை 4 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததாகவும், எனினும் பலத்த முயற்சிக்கு பின்னர் தற்போது தீப்பரவல் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த கட்டிடத்தினுள் இருந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தீப்பரவல் எதனால் ஏற்பட்டது என்பதற்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ரொறன்ரோ தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.