Home » முதன்மைச் செய்திகள் » விஜய் மல்லையா தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

விஜய் மல்லையா தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார்.

👤 Sivasankaran5 Jan 2019 11:32 AM GMT
விஜய் மல்லையா தலைமறைவு குற்றவாளியாக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Share Post

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் விஜய் மல்லையா, லண்டனில் இருக்கிறார்.

தற்போது இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை இங்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தொடர்கிறது.

இந்தியாவில் அவருக்கு எதிரான வழக்கை சிபிஐ, அமலாக்கப்பிரிவு தீவிரப்படுத்தியது. தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. தலைமறைவு பொருளாதார குற்றவாளி என அறிவிக்கக்கோரும் வழக்கில் தான் பதிலளிக்க அவகாசம் தர வேண்டும் என விஜய் மல்லையா தரப்பில் தொடர்ந்து நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து வழக்கை ஒத்திவைக்க நேரிட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டப்படி பொருளாதார குற்றங்கள் செய்தவர்கள் மீதான வழக்கு நிலுவையில் உள்ள போது, நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொள்ளாமல், இந்திய நீதிமன்றங்களின் அதிகார வரம்புகளிலிருந்து தப்பித்து தலைமறைவானால், அவர்களை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து அவர்களது சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யலாம் என்ற அதிகாரம் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டது.

இன்று சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. புதிதாக கொண்டு வரப்பட்ட 'தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்' கீழ், விஜய் மல்லையாவை தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவித்து உத்தரவிட்டது. இப்போது அவருடைய சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்ய முடியும்.