Home » முதன்மைச் செய்திகள் » கனடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் தெரிவிக்காத சீனா

கனடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் தெரிவிக்காத சீனா

சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, கனடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றது.

👤 Sivasankaran5 Jan 2019 3:51 PM GMT
கனடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் தெரிவிக்காத சீனா
Share Post

சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, கனடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றது.

இந்த செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில், கனடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடுவது தங்களுக்கு வசதியாக இல்லை என சீனா கூறியுள்ளது.

தங்களால் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடியர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதனை தெரிவிக்க விரும்பவில்லை என சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லூ காங் தெரிவித்துள்ளார்.

கனடியர்களான மைக்கல் கோவ்ரிங் மற்றும் மைக்கல் ஸ்பாவோர் ஆகிய இருவரும் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கியதாக கூறி சீனாவில் வைத்து அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான முறுகல்நிலை அதிகரித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

சீனாவின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹூவாவேயின் உயர்நிலை நிதி அதிகாரியான மெங் வான் ஷோ, அமெரிக்காவின் வேண்டுகோளின் அடிப்படையில் வன்கூவரில் வைத்து கனடிய மத்திய பொலிஸார் கைது செய்யப்பட்டதன் பின்னணியிலேயே இந்த இருவரும் சீன அதிகாரிகளால் பழி வாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.