Home » முதன்மைச் செய்திகள் » வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

👤 Sivasankaran7 Jan 2019 10:56 AM GMT
வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்
Share Post

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் சுரேஷ் ராகவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று அவர் ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேஷ் ராகவன் ஆசியாவில் முதன்முறையாக ஜேம்ஸ் மெடிசன் நம்பிக்கை புலமைப் பரிசிலை இரண்டு தடவைகள் பெற்றார்.

2005 ஆம் ஆண்டு கென்ட் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் MA பட்டம் பெற்ற இவர் 2008ஆம் ஆண்டு PhD முடித்தார் பின்னர் 2008-2011களில் பிரித்தானிய அரசாங்கத்தின் புலமைப்பரிசிலும் அவருக்கு வழங்கப்பட்டது.