ஈராக்கில் ஷியா முஸ்லிம் மத தலைவருடன் போப் சந்திப்பு
ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி நேரில் வரவேற்றார்.
👤 Sivasankaran7 March 2021 7:21 AM GMT

கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் பன்னாட்டுப் பயணமாக போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஈராக் நாட்டுக்கு சென்றுள்ளார்.
84 வயதான போப் பிரான்சிஸ் தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றடைந்தார்.
அங்கு அவரை ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி நேரில் வரவேற்றார்.
போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தொடங்கி 4 நாட்களுக்கு ஈராக்கில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
போப் பிரான்சிஸ், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மிக மூத்த தலைவர்களில் ஒருவரான அயத்துல்லா அலி அல் சிஸ்தானியை நேரில் சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் பூட்டிய அறைக்குள் சுமார் 50 நிமிடம் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire