ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட அமைச்சரின் காளை மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் என செல்லப்பெயர் சூட்டப்பட்ட காளை மரணமடைந்தது
👤 Saravana Rajendran11 Feb 2018 3:59 PM GMT

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் காலையில் ஜல்லிக்கட்டுத் தொடங்கியது. தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான காளைகள் இதில் கலந்துக்கொண்டன. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வளர்ப்புக்காளைகளான, கொம்பன், செவளை, உள்ளிட்ட நான்கு காளைகள் கலந்துக்கொண்டன.
இதில்,கொம்பன் காளையை அமைச்சரின் வீட்டார் மிகவும் செல்லமாக வளர்த்துவந்தனர். அமைச்சருக்கும் கொம்பன் ஒரு மீது அளவற்ற பாசம் உண்டு. இக் கொம்பன் காலை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு பிடி படாத மாடாக விளையாடியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரபலமான ஜல்லிக்கட்டுகளிலும் கொம்பன் தவறாமல் இடம் பெற்று விடும். இன்று தென்னலூர் ஜல்லிக்கட்டிலும் கலந்துக்கொண்டது. 'கொம்பன் களத்துக்கு வர்றான். பிடிபடாத இந்தக்காளையைப் பிடித்தால், அமைச்சர் சார்பில் தங்கக் காசு பரிசு' என்று அறிவிப்பாளர் சொல்ல பெரும் ஆரவாரத்தோடு கொம்பன் அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலைவிட்டு சீறிப்பாய்ந்த கொம்பன், முழு ஆக்ரோசத்தோடு பாய, மாடு பிடி வீரர்கள் சட்டென்று விலக, அருகில் இருந்த கல்தூண் மீது கொம்பன் தலை நேரடியாக மோதியது. அதில்நிலைகுலைந்த கொம்பன் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தது.
அமைச்சரின் ஆட்கள் உடனடியாக டிராக்டரில் அந்தக்காளையை தூக்கி போட்டுக்கொண்டு சிகிச்சைக்காக விரைந்தார்கள். ஆனால்,போகும் வழியிலேயே கொம்பன் இறந்தது. "முழு பலத்துடன் கல்தூணில் மோதியதால் நேரடியாக அதன் மூளையை பாதித்து மரணமடைந்து விட்டது. இதனை அடுத்து முழுமையான ஈமச்சடங்குகளுடன், அமைச்சரின் தோட்டத்திலேயே அந்தக்காளை புதைக்கப்படுகிறது" என்று அமைச்சரின் உதவியாளர் கூறினார். அமைச்சரிடம் காளை இறந்தது பற்றி போனில் தகவல் தெரிவித்த உடன் அவர் கண்கலங்கிவிட்டார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire