Home » முதன்மைச் செய்திகள் » நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது. பழிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து வைரமுத்து வேதனை
நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது. பழிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து வைரமுத்து வேதனை
நிலம் நனைய தண்ணீர் கேட்டோம், நதி நனைய மட்டுமே கிடைத்துள்ளது என்று வைரமுத்து டிவீட்டரில் பதிவு செய்துள்ளார்.
👤 Saravana Rajendran17 Feb 2018 7:12 AM GMT
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதில் காவிரி ஆற்றை உரிமை கொண்டாட எந்த மாநிலத்திற்கும் உரிமையில்லை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திற்கு கர்நாடகா 177.25 டி.எம்.சி நீர் தர உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடுவர் மன்றம் 192 டிஎம்சி வழங்க உத்தரவிட்ட நிலையில் அதனை சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது. தற்போதைய தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைவாக கிடைக்கும். கர்நாடகத்துக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவு.
வைரமுத்து @வைரமுத்து
தீர்ப்பா? தீர்வா? நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்;
நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது.
தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்;
எதிர்கொள்வது மறுபுறம். என்ன செய்யப் போகிறோம்?
#தீர்ப்பா_தீர்வா?
7:35 PM - Feb 16, ௨௦௧௮
2,342 638 people are talking about this
இதுகுறித்து தற்போது கவிஞர் வைரமுத்து டிவிட் செய்துள்ளார். அதில் ''தீர்ப்பா? தீர்வா? நிலம் நனையத் தண்ணீர் கேட்டோம்; நதி நனைய மட்டுமே கிடைத்திருக்கிறது. தீர்ப்பை ஏற்றுக்கொள்வது ஒருபுறம்;எதிர்கொள்வது மறுபுறம். என்ன செய்யப் போகிறோம்? #தீர்ப்பா_தீர்வா?'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire