Home » முதன்மைச் செய்திகள் » விரிவுபடுத்தும் பணிக்காக மூடப்படவுள்ள அங்கூலியா பள்ளிவாசலின் இறுதித் தொழுகை
விரிவுபடுத்தும் பணிக்காக மூடப்படவுள்ள அங்கூலியா பள்ளிவாசலின் இறுதித் தொழுகை
சிங்கப்பூரின் மிகப் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்று, விரிவுபடுத்துதல் மற்றும் அழகூட்டும் பணிகளுக்காக மூடப்பட உள்ளது அதற்கு முன்பாக இறுதித் ஜும் ஆத் தொழுகையை நடத்தியுள்ளது.
👤 Saravana Rajendran23 Feb 2018 4:31 PM GMT

அங்கூலியா பள்ளிவாசல் விரிவுபடுத்தும் பணிகள் நிறைவு பெற்றதும் அது சுமார் 2,500 பேர் தொழுகை நடத்தப் போதுமான நான்கு மாடிக் கட்டடமாக இருக்கும்.
சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் பள்ளிவாசலின் விரிவாக்கப் பணிகளை இஸ்லாஇய விவகாரங்களுக்கான அமைச்சர் டாக்டர் யாக்கோப் இப்ராஹிம் இன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.
மேம்பாட்டுப் பணியின் ஓர் அங்கமாக, அங்கு மேலும் ஆயிரம் பேர் தொழுகை நடத்தத் தேவையான இடவசதி சேர்க்கப்படும். முக்கியத் தொழுகைக் கூடம் இரண்டாம் மாடிக்கு மாற்றப்படும். முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் புதிய வசதிகளும் உருவாக்கப்படும்.
விரிவாக்கப் பணி, 2019 டிசம்பருக்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire