Home » முதன்மைச் செய்திகள் » ஜெயலலிதா சிலையா? வளர்மதி சிலையா?

ஜெயலலிதா சிலையா? வளர்மதி சிலையா?

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் சிலை அவரைப் போல் இல்லாமல், முன்னாள் அமைச்சர் வளர்மதி போல் உள்ளது என்று தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

👤 Saravana Rajendran24 Feb 2018 6:01 PM GMT
ஜெயலலிதா சிலையா? வளர்மதி  சிலையா?
Share Post

அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரை போலவே இல்லை என கருத்து எழுந்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை இன்று திறக்கப்பட்டது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
ஆறு விரல்
ஜெயலலிதா வெற்றிச்சின்னத்தைப் போல் இரட்டை இலைச்சின்னத்தைக் காண்பிப்பது போன்று கைகளைத் தூக்கில் இரட்டை விரல் காண்பிப்பது போன்று சிலை இருந்தது, தற்செயலாக சிலையின் விரலை எண்ணிய போது அங்கு இரண்டு விரல் அடையாளம் காண்பிப்பதாகவும் மடங்கிய விரல்கள் நான்காவும் இருந்தது, ஆகமொத்தம் 6 விரல்கள் ஜெயலலிதாவிற்கு 5 விரல்கள் தான் உண்டு , எக்ஸ்டா ஒரு விலை சிற்பி செதுக்கிவிட்டார்.
அது கூடப் பரவாயில்லை, அந்தச்சிலைதான் பார்க்க மிகவும் பரிதாபகரமாக உள்ளது, மேலிருந்து பார்த்தால் முத்துராமலிங்கம் முகபாவம், பக்கவாட்டில் இருந்து பார்த்தால் சசிகலா முகபாவம் கீழிருந்து பார்த்தால் முன்னாள் அமைச்சர் வளர்மதி முகபாவம் தெரிகிறது எதிரில் இருந்து பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி போன்று தெரிகிறது,
இது தொடர்பாக இன்று முழுவதும் சமூகவலைதளங்களில் பதிவுகள் வந்துகொண்டே இருந்தது. இதைக்கண்டு கோபமுற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மனசாட்சி இல்லாதவர்கள் தான் சிலைபற்றி குறைகூறுவார்கள் என்று செய்தியாளர்களிடம் திட்டித்தீர்த்தார்.
நீங்கள் ஒருமுறை பார்த்துச்சொல்லுங்கள் இது ஜெயலலிதாவே தானா? அல்லது ஜெயலலிதா மாதிரியா??