சிவகாசி மத்தாப்பு போல் மகிழ்வித்து மறைந்தார்
பெண்களை காட்சிப்பொருளாகவும், கவர்சிப் பொருளாகவும் கருதிவந்த திரை உலகில், தன்னுடைய நடிப்பால் தமிழ் சினிமாவில் பெரும் புரட்சியை உருவாக்கியவர்கள். குழந்தை நட்சத்திரமாக திரையில் தோன்றியவர்
👤 Saravana Rajendran25 Feb 2018 2:01 AM GMT

தமிழ் உலகில் முன்னணி திரைநட்சத்திரமாக தன்னுடைய திரைவாழ்க்கையில் திகழ்ந்தார். இன்றுவரை இந்திய திரை உலகில் இவருக்கு ஈடான புகழ் பெற்றவர்கள் யாருமில்லை.
எந்த கதாப்பாத்திரம் என்றாலும் அதில் முழுமையான ஈடுபாட்டோடு நடிப்பவர், இவரது மூன்றாம் பிறை மனநலம் குன்றியவராக நடித்த போது சுப்பிரமணி என நாய்க்குட்டிக்கு பெயர் வைத்து அழைக்க காட்சிகள் திரை உலகில் என்றென்றும் நினைவில் நிற்கும், அதே போல் 16 வயதிலேயே படத்தில் இட பெற்ற மயிலு கதாப்பத்திரமும் ஒரு கல்லில் வடித்த சிலை போன்று தமிழ் திரைஉலகில் நினைவில் நிற்கும்,
பொதுவாக ஒரு மொழியில் தொடர் தோல்விகளை சந்தித்த பிறகு பிறமொழிக்கு தாவிவிடுவார்கள். ஆனால் தமிழகத்தில் 1983-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் உச்சகட்ட புகழை நட்சத்திரமாக திகழ்ந்தார். அந்த நிலையில் இந்தியில் சென்றார் அவர் இந்திக்கு சென்ற போது முதலாகவெளிவந்த இம்மத்வாலா(துணிச்சல்காரன்) பெரும் வெற்றியைப் பெற்றது, இந்தி திரைஉலகில் நாயகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த போது அங்கும் நாயகியாக தனது முத்திரையைப் பதித்தார்.
ஸ்ரீதேவி 13 ஆகஸ்டு 1963 அம் ஆண்டு தமிழ்நாட்டில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். இவரது தாயார் ரஜேஸ்வரி, தந்தையார் அய்யப்பன், இவர்களின் தாத்தா கொழும்பில் ஆங்கிலேய வழக்கறிஞர்களிடம் சமையற்கலைஞராக இருந்தார். பிறகு அவர் குடும்பத்தோடு திருநெல்வேலி வந்து பிறகு சிவகாசிக்கு இடம் பெயர்ந்தார்கள்.
1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றுள்ளார்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire