உன்னை யாராவது "ரேப்" செய்தார்களா?? நீதிபதி திடீர் கேள்வி
உச்சநீதிமன்றத்தில் நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஒரு பொதுநலவழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பொதுநல மனுவை தாக்கல் செய்த பெண் வழக்கறிஞரைப் பார்த்து உன்னையாராவது பாலியல்வன்புணர்வு செய்தார்களா? என்று கேள்வி கேட்டார்.
👤 Saravana Rajendran21 April 2018 12:05 AM GMT

நாடு முழுவதும் சிறுமிகள் பாலியல் வன்புணர்வு கொலை போன்றவை அதிகரித்துள்ளது. இந்தக்கொலையில் பெரும் பாலும் பாஜக பிரமுகர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர் குற்றவாளிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் உத்திரப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் சங்கார் சிறுமி ஒருவரை பாலியல்வன்கொடுமை செய்து அவரது தந்தையைக் கொலைசெய்தார்.
இவ்விவாகாரம் தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் கைதுசெய்யாமல் ஒரு ஆண்டு அலைக்கழித்தனர். இந்த நிலையில் புகார் கொடுத்த சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
இவ்விவகாரம் அலகாபாத் நீதிமன்றத்திற்கு கொண்டுசென்ற பிறகு சிபிஅய் விசாரணை மேற்கொண்டு தற்போது ஒராண்டு கழித்து பாலியல்வன்கொடுமை செய்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது சகோதரர் கொலை மற்றும் பாலியல்வன்கொடுமை அழக்கில் கைது செய்துள்ளனர்.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பொது நலவழக்கு ஒன்றை பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில் நாடு முழுவதும் அரசியல் பிரமுகர்களால் சிறுமிகள் பாலியல்வன்கொடுமைக்கு ஆளாகில் கொலைசெய்யப்படுகின்றனர். ஆகவே பிரதமர், அமைச்சர்கள், இதர அரசியல் பதவியில் உள்ளவர்கள் மீது புகார் கொடுத்த உடன்நடவடிக்கை எடுக்க உத்தரவிடவிடவேண்டும் என்று பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கோபம் கொண்டார்.
குற்றவழக்கை எவ்வாறு பொதுநலவழக்காக தாக்கல் செய்யலாம், இந்த வழக்கு ஏற்கனவே அலகாபாத் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு இங்கே ஏன் கொண்டுவந்தாய் என கோபத்துடன் கேட்டு நீ நேரடியாக பாதிக்கப்பட்டாயா, உன்னை யாராவது "ரேப்" செய்தார்களா? என கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து அந்த வழக்கறிஞர் அவமானத்துடன் வெளியேறிவிட்டார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire