தங்கச் சுரங்கம் சரிந்த விபத்தில் 30 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.
👤 Sivasankaran6 Jan 2019 5:18 PM GMT

ஆப்கானிஸ்தான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.
இதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிலர் இன்று 200 அடி ஆழத்தில் சுரங்கத்திற்குள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது.
விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire