ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 பேர் பலி
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.
👤 Sivasankaran5 Jan 2019 3:08 PM GMT

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் டமாஸ்க் என்கிற நகரில் போகோஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். ராணுவ வீரர்களுக்கு உதவிட நைஜீரிய விமானப்படைக்கு சொந்தமான 'எம்.ஐ-35எம்' ரக ஹெலிகாப்டர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் விமானி உள்பட 5 பேர் இருந்தனர்.ஹெலிகாப்டர் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire