ஜெனிவா தீர்மானத்தில் இருந்து சிறிலங்கா விலகுகிறது - தினேஷ் குணவர்த்தன
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1, 34/1, 40/1, தீர்மானங்களுக்கான இணை அனுசரணையில் இருந்து சிறிலங்கா...
👤 Sivasankaran26 Feb 2020 3:10 PM GMT

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1, 34/1, 40/1, தீர்மானங்களுக்கான இணை அனுசரணையில் இருந்து சிறிலங்கா அரசு விலகிக் கொள்வதாக, ஜெனிவாவில் நடைபெற்று வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் வெளிவிகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இன்று அறிவித்துள்ளார்.
சிறிலங்கா குறித்து நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடப்பாடுகளை, நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் செயற்படுத்தப்பட முடியாது , மக்களின் இறையாண்மையை இது மீறுவதாக அமைந்துள்ளது.
இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறி அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. அது தொடர்பில், நாடாளுமன்றத்தில் குறிப்பும் இல்லை" என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire