முஸ்லிம் திருமண அழைப்பிதழில் இடம் பிடித்த இந்துக் கடவுள்கள்
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் வாழும் முஸ்லிம் ஒருவர் தமது மகளின் திருமண அழைப்பிதழில் இந்துக்...
👤 Sivasankaran29 Feb 2020 3:58 PM GMT

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் வாழும் முஸ்லிம் ஒருவர் தமது மகளின் திருமண அழைப்பிதழில் இந்துக் கடவுள்களின் படங்களை அச்சிட்டு மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மீரட் ஹஸ்தினாபூர் பகுதியைச் சேர்ந்த முகம்மது சரபாத் என்பவர் வரும் 4 ஆம் தேதி நடக்கும் தனது மகள் அஸ்மா காத்துனின் திருமண அழைப்பிதழில் பிள்ளையார் மற்றும் ராதை-கிருஷ்ணர் படங்களை அச்சிட்டுள்ளார். மத வெறுப்பு சமூகத்தை வேட்டையாடும் வேளையில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வெளிக்காட்ட இந்த முயற்சி உதவும் என்பது அவரது நம்பிக்கை. இந்த திருமண அழைப்பிதழுக்கு தமது நண்பர்கள் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire