Home » மருத்துவம் & சுகாதாரம் » ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும் செர்ரி பழங்கள்

ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும் செர்ரி பழங்கள்

குளிர்ந்த பிரதேசங்களில் அதிகம் விளைவது “செர்ரி” பழங்கள். இந்த பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

👤 Sivasankaran22 Jan 2019 4:59 PM GMT
ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும் செர்ரி பழங்கள்
Share Post

குளிர்ந்த பிரதேசங்களில் அதிகம் விளைவது "செர்ரி" பழங்கள். இந்த பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செர்ரி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது. எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் பாதுகாப்பதில் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.

செர்ரி பழங்கள் சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். காலை மற்றும் மதிய வேளைகளில் செர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால் உடலின் வேளைகளில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

செர்ரி பழத்தில் வைட்டமின் "ஈ" சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை மிகவும் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து, கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலமாக இருக்க விரும்புபவர்கள் செர்ரி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

செர்ரி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய சத்துகள் அதிகம் உள்ளன. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். குடல்களில் இருக்கும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் கிவிபழம் பேருதவி புரிகிறது.

பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. செர்ரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் "எ" மற்றும் "ஈ" ஆகியவை தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.

உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். செர்ரி பழம் உடல் எடை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. உடல் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

செர்ரி பழம் இயற்கையிலேயே ரத்த ஓட்டத்தை தூண்டும் ஒரு பழம் ஆகும். எனவே இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டத்தை கிடைக்க ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்க செர்ரி பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த வழிமுறையாகும்.

உடலில் நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவர்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் மேற்கண்ட பாதிப்புகள் கொண்டவர்கள் செர்ரி அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது. செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.